ஸ்ரீவைகுண்டம் லாக்-அப் டெத்! டிஎஸ்பி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
Sri Vaikundam Lock up Death Case Judgement
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வின்சென்ட் மரணம் (லாக்-அப் டெத்) தொடர்பான வழக்கில், தற்போது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பியாக உள்ள ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999-ல் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் போலீசாரால் வின்சென்ட் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. வின்சென்ட் மனைவி கிருஷ்ணம்மாள், இது காவல் கொலை என புகார் அளித்ததையடுத்து, கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் பேரில் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், ராமகிருஷ்ணன், சோமசுந்தரம், ஜெயசேகரன், பிச்சையா, வீரபாகு, ஜோசப்ப்ராஜ், செல்லதுரை, சுப்பையா மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்தார்.
இந்த வழக்கில் ஓய்வு பெற்ற போலீசார் சிவசுப்பிரமணியன், ரத்தினசாமி விடுவிக்கப்பட்டனர்.
English Summary
Sri Vaikundam Lock up Death Case Judgement