இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. 

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல் இலங்கை கடற்கொள்ளையர்கள் அவ்வப்போது தமிழக மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து வலை மற்றும் மீன்களை திருடி செல்கின்றனர்.

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்படி, இலங்கை கடற்படையினரின் ரோந்து படகை வைத்து மோதியதில் தமிழக மீனவர்களின் விசைப்படகு சேதம் அடைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka Coastal Guard attack madabam fisherman


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->