அமலாக்கத்துறை வசம் சிக்கிய எஸ்.ஆர்.எம். நிறுவனர்!...பாரி வேந்தர் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக 88 கோடியே 66 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். நிறுவனர் பாரிவேந்தர், வேந்தர் மூவீஸ் இயக்குநர் மதன், உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் இந்த வழக்கில் இருந்து கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், மாணவர்களிடம் மோசடி செய்த தொகையை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பாரிவேந்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

 

தொடர்ந்து அமலாக்கத்துறை சம்மனுக்கு தடைகோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரிவேந்தர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த போது, 
 விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சம்மனை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.

பின்னர் அமலாக்கத்துறையின் வாதத்தை  ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணை அமைப்பு அதன் கடமையை செய்வதை தடுக்க முடியாது என்று தெரிவித்து பாரிவேந்தரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SRM caught in the hands of the enforcement department Founder Madras High Court dismissed Pari Vendars petition


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->