மகளிருக்கான இலவச டிக்கெட்டுகளை வைத்து, ஸ்டாலின் படம் வரைந்த இளம்பெண்.!  - Seithipunal
Seithipunal


சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்

அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். 

ஆனால் சில பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாநகர போக்குவரத்து கழகம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண பஸ்களை 'பிங்க்' நிறத்தில் மாற்றியுள்ளது.

இந்த நிலையில், தற்போது சுப்ரஜா சரவணன் என்ற பெண், இந்த பேருந்தில் கொடுக்கப்படும் இலவச டிக்கெட்டுகளை கொண்டு ஸ்டாலின் படத்தை வரைந்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி சுப்ரஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin photo drawing using free ticket


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->