ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு செல்லாமல் பத்திரம் வாங்கலாமா? - வந்துவிட்டது சூப்பர் திட்டம்.! - Seithipunal
Seithipunal


மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி பதிவுத்துறையில் கணினிமயமாக்கல் என்கிற “ஸ்டார்” திட்டத்தை முன்னோடி திட்டமாக தொடங்கி வைத்தார். முதன்முதலில் 23 அலுவலகங்களில் தொடங்கப்பட்ட கணினிமயமாக்கல் திட்டம் பின்னர் படிப்படியாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் கொண்டுவரப்பட்டது. 

நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களிடம் எளிய அணுகுமுறை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு புதிய மேம்படுத்தப்பட்ட வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டார் 2.0 என்ற சாஃப்ட்வேரை மேம்படுத்தும் வகையில் ஸ்டார் 3.0 என்ற புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் விரைவில் இந்த மென்பொருள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. பதிவுத்துறையில் தனித்துவமான வசதிகளுடன், அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி பதிவை எளிமையாக்கும் விதமாக ஸ்டார் 3.0 என்னும் புதிய மென்பொருளில் செயற்கை நுண்ணறிவை கூடுமானவரை பயன்படுத்துதல், மனித தலையீடின்றி தானாகவே சேவைகளை அளித்தல், பொதுமக்கள் அலுவலகம் வராமலேயே சேவைகளை பெறுதல், தற்போதைய இணைய தளத்தை புதுப்பித்து எளிமையாக்கல், மென்பொருளை அதிவேகமாக இயங்க வைக்கும்.

இந்த மென்பொருள் மூலமாக 1895 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பத்திரங்கள் டிஜிட்டல் முறைக்கு கொண்டு வரப்பட உள்ளன. ஆகவே மக்கள் இனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் வரவேண்டிய அவசியமில்லாமல் ஆன்லைனில் பத்திரங்களை பெற முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

star 3.0 scheme in tamilnadu


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->