தூத்துக்குடியில் பரபரப்பு.. ஸ்டெர்லைட் ஆலை எதிர்பாளர்கள் அதிரடி கைது.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது என மனு அளிக்க வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்ற கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது. இதற்கிடையே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணிக்காக அனுமதி வழங்கக் கூடாது என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பு, மக்கள் அதிகாரம், விசிக மற்றும் மதிமுக கட்சியினர் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.

அப்பொழுது அனைவரையும் தடுத்து நிறுத்திய போலீசார் ஒரு சிலரை மட்டுமே அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்து அனைவரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டும் என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் அனைவரும் தூத்துக்குடி-பாளையங்கோட்டை நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் பெயரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் அனைவரையும் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு அளிக்க வந்தவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sterlite plant opponents arrested in thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->