'டானா' புயல் எதிரொலி : அடுத்த 4 நாட்களுக்கு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு!
Storm dana echo trains canceled for next 4 days southern railway action order
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று 'டானா' புயலாக உருவாகியுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஒடிசாவின் புரி- சாகர் தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்பதால், மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று ரத்து செய்யப்படுவதாகவும், மறுமார்க்கமாக, காலை 10 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புவனேஸ்வர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் 27-ம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
English Summary
Storm dana echo trains canceled for next 4 days southern railway action order