கரையைக் கடந்த பெஞ்சல் புயல் - எச்சரிக்கை கூண்டுகளை இறக்க அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்ததனால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும், நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே இந்தப் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் கரையை கடந்ததையொட்டி ஒன்பது துறைமுகங்களில் ஏற்றபட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

storm warning cage remove in port


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->