வரும் தேர்தல்களை எதிர்கொள்ள வியூகம்.. பாஜக தீவிர ஆலோசனை!  - Seithipunal
Seithipunal


ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி அளவிலான பாஜக தீவிர உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சி சாதனைகளை விளக்கி , தீவிர உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

மாநில பொருளாதார  பிரிவு செயலாளர் வழக்கறிஞர் குமார் தலைமை தாங்கினார்.நகரத்தலைவர் மனோஜ்குமார் முன்னிலை  வகித்தார்.பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நடைபெற்று வரும் பத்தாண்டுகால  பாஜக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் ,கட்சியின் கட்டமைப்பை  கடைக்கோடி  கிராமம் வரை கொண்டு செல்வது குறித்தும் விளக்கப்பட்டது.

மேலும் தீவிரமாக பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும்,வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்த  வியூகங்களும் கருத்தரங்கில் விளக்கப்பட்டன. கூட்டத்தில் மண்டல் தலைவர்கள் கார்த்திக் ,நந்தினி, ராஜா, தெய்வம் உள்பட ,ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அளவிலான தீவிர உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Strategy to face the upcoming elections. BJPs Serious Advice


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->