வேலை நிறுத்தம்!!! 3 வது நாளாக விசைத்தறியாளர்கள் போராட்டம்...!!! தேக்கத்தில் இருக்கும் காடா துணிகளை என்ன செய்யவது?
Strike Power looms protest for 3rd day with the stagnant cotton fabrics
திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களிலுள்ள சோமனூர்,பல்லடம், காரணம்பேட்டை,தெக்கலூர், அவிநாசி மற்றும் மங்கலம் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.இந்த பகுதியில் சுமார் 1,00,000 விசைத்தறிகள் மற்றும் 10000 விசைத்தறி கூடங்கலுள்ளன.

இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.இந்நிலையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு அந்த பகுதியே தொழிலாளர்களின்றி காணப்பட்டது.மேலும் இதில் கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இன்று 3-வது நாளாக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களிலுள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம் உருவாகியுள்ளது.இது தற்போது மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Strike Power looms protest for 3rd day with the stagnant cotton fabrics