குளிக்க சென்ற மாணவனின் கொடூர நிலை! சோகத்தில் குடும்பத்தினர்!
student drowned water death
சேலம், மேட்டூர் அடுத்துள்ள கட்டிநாயக்கன்பட்டி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் விஜய் (வயது 17) இவர் ஜலகண்டாபுர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கட்டிநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற விழாவில் விஜய் தனது தாய் பழனியம்மாளுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் விஜய் அங்கிருந்து சென்று வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.
அப்போது விஜயின் உடைமைகள் மாரியம்மன் கோவில் அருகே உள்ள தெப்பக்குளம் கரையில் இருந்ததை பார்த்து பொதுமக்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக ஜலண்டாபுரம் காவல் நிலையத்திற்கும் நங்கவள்ளி தீயணைப்பு துறைனருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
மாணவன் விஜய் தெப்பக்குளத்திற்கு தனது நண்பர்களுடன் குளிக்க சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நங்கவள்ளி தீயணைப்பு துறையினர் தெப்பக்குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தபோது மாணவன் விஜய் பிணமாக மீட்கப்பட்டார்.
மேலும் விஜய் தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
student drowned water death