கிருஷ்ணகிரி அருகே திடீர் நிலநடுக்கம்!...பொது மக்கள் கடும் பீதி! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூமிக்கு அடியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். மேலும் , இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே நேற்று லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 1.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நில அதிர்வின் தாக்கத்தின் காரணமாக, அரசம்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, பனங்காட்டூர், சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும், இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudden earthquake near krishnagiri public panic


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->