பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் சனாதனத்திற்கு ஆதரவு - திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக.!
support sanatana dharma in plus two book
பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் சனாதனத்திற்கு ஆதரவு - திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக.!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசியது நாடு முழுவதும் தொடர்ந்து பேசு பொருளாகி உள்ளது. இதனால் அவரை இந்து அமைப்பினரும், பாஜகவினரும் தொடர்ந்து விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகத்தில் இந்து சமயம் மற்றும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக கருத்துகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டுக்கான அறிவியலும் இந்திய பண்பாடும் என்ற பாட புத்தகத்தில் பக்கம் 58-ல், "இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். ஹிம்-ஹிம்சையில், து-துக்கிப்பவன் எனப் பொருள்படும்.
ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது வருந்துவதாகவே இருந்தால், அத்துயரத்தை தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.
இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. சனாதன தருமம் என்றால் அழிவில்லாத நிலையான அறம் எனப்படும்" என்று பதிவிடப்பட்டுள்ளது. இதனை சுட்டிகாட்டி திமுகவினரை பாஜகவினர் வம்புக்கு இழுத்து வருகின்றனர்.
English Summary
support sanatana dharma in plus two book