குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பது தவறில்லையா? கடும் கொந்தளிப்புடன் உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


போக்சோ சட்டத்தின் படி குழந்தைகள் சார்ந்த ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்த நபரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

வழக்கும், பின்ணணியும்:

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் மொபைல் போனில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளைஞர் தாக்கல் வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பொதுவாக மொபைல் போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் இல்லை என்பதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்குற்றம் சாட்ட முடியாது என உத்தரவிட்டு இருந்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி என்ற அமைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறபித்தஉத்தரவை ரத்து செய்தனர். மேலும், "குழந்தைகள் ஆபாசப் படங்கள்" என்ற வார்த்தைக்கு மாற்றாக Child sexual and Exploitative abuse material என்று கொண்டுவர மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court Of India order to Central Govt Child sexual and Exploitative abuse material


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->