இனி பல்கலைக்கழக வேந்தராக செயல்படுவார் முதல்வர் ஸ்டாலின் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!!
supreme court order cm mk stalin chancellor
தமிழக அரசு சார்பில் மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர் ஆர். என் ரவிக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதாவது, உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ன் படி தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த மசோதாக்கள் ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவிகளில் இருந்து ஆளுநர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
supreme court order cm mk stalin chancellor