பதின்மூன்றாயிரம் வழக்குகள் ரத்து : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
supreme court order to 13 thousand case cancel
உச்ச நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் நடவடிக்கையாக ஒரே நேரத்தில் பதின்மூன்று ஆயிரத்து நூற்று நாற்பத்தேழு பழைய வழக்குகள் அதிரடியாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் பதிவாளர் சிராக் பன்னுசிங் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்த வழக்குகள் அனைத்தும் 2014-ம் ஆண்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டவை. இதில், 1987-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் அடங்கும்.
இந்த வழக்குகளுக்கு "டைரி எண்" அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. மேலும், மனுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்யுமாறு மனுதாரர்களிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், பல ஆண்டுகள் ஆனபோதும் அவர்களின் குறைபாடுகளை சரிசெய்யவில்லை. எனவே, விதிமுறைப்படி, அந்த வழக்குகள் ரத்துசெய்யப்பட்டு இருப்பதாக சிராக் பன்னுசிங் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
supreme court order to 13 thousand case cancel