அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கு : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2011 மற்றும் 2015 -ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி 4 கோடியே 32 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை சேர்ந்த பாலாஜி சார்பில் வக்கீல் பாலாஜி ஸ்ரீனிவாசன், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் கடந்த 10-ந்தேதி ஆஜரானார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது, "இந்த மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. அதன் காரணமாக மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

இந்த மேல் முறையீட்டு மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த மனு நவம்பர் 18-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றுத் தெரிவித்தது. அதன் பின்னர் 18-ந்தேதி நடைபெற்ற விசாரணையின் போது, இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நவம்பர் 23-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது'' என்று தெரிவித்தனர். 

அதன் படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததில், மேல்முறையீடு மனு தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இது தொடர்புடைய வழக்கு ஆவணங்களை தற்போதுள்ள நிலையிலேயே பத்திரமாக வைக்க வேண்டும் என்றும், இந்த வழக்குக்கான இறுதி விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court order to tamilnadu government for minister sendhil balaji Financial fraud case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->