பதற்றம்! எம்.ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்! - Seithipunal
Seithipunal


நில மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த எம்.ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையான முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் நிபந்தனை ஜாமின் அடிப்படையில்  கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் பிரவீன் கரூர் ரெட்டைப்பாளையம் பகுதியில் டீக்கடையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் பிரவீனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலால் கழுத்தில் பலத்த காயமடைந்த பிரவீன் கரூர் தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதனையடுத்து அதிமுக பிரமுகர்கள் முன்னாள் அரசு வக்கீலுமான கரிகாலன் தெரிவித்ததாவது, பிரவின் மீது நடந்த தாக்குதல் பின்னணியில் திமுக இருப்பதாக சந்தேகம் உள்ளது. கரூர், கோவை சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் பிரவீனை தாக்கி விட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இந்த கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

தாக்குதல் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து காவல்துறையிடம் வழங்கி உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Suspects attack MR Vijayabaskar supporter


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->