க்ளீன் பாலிடிக்ஸின் "பெரிய ஊழல்".. ஐடி தம்பி என்னனு விசாரி.. ரவுண்டு கட்டும் எஸ்.வி சேகர்..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினர் மற்றும் திமுக எம்.பி, அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். 

மேலும் தான் கையில் கட்டி இருக்கும் ரஃபேல் வாட்ச் குறித்தான ஆவணங்களையும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருக்கும் எனக்கு மாதம் 7 முதல் 8 லட்சம் ரூபாய் செலவாகுவதாகவும், இந்த செலவுகளை தன்னை சுற்றியுள்ள நண்பர்களும் நல்லவர்களும் பார்த்துக் கொள்வதாகவும் பேசியிருந்தார்.

அண்ணாமலையின் இத்தகைய பேச்சுக்கு பாஜக ஆதரவாளரும் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.வி சேகர் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் "லட்ச ரூபாயில் அடுத்தவன் காசில் அமோகமாக வாழ்பவனை விட ஆயிரம் ரூபாய் சொந்த காசில் வாழ்பவனே மானஸ்தன். நேர்மையானவன். தலைமைக்கு தகுதியானவன். ஜெய்ஹிந்த்" என காமராஜர் புகைப்படத்துடன் அண்ணாமலையை மறைமுகமாக கலாய்த்து இருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது "சட்டம் என்ன சொல்கிறது!? ரத்த சம்மந்த உறவுகளை தவிர யார் பணமாக உதவி செய்தாலும் வருமானவரி கட்ட வேண்டும். ஏதாவது  பழைய பொருள் வாங்கினாலும் ₹19 ஆயிரத்துக்கு மேல் பணமாக குடுக்கக்கூடாது. ₹10L x 12=. ₹ 1.2 crores.  இதுவே பெரிய ஊழலா இருக்கே. IT தம்பி இது என்னன்னு விசாரி." என அண்ணாமலையை விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.

பாஜகவின் ஆதரவாளராக இருந்து வரும் எஸ்.வி சேகர் தொடர்ந்து அண்ணாமலையை விமர்சனம் செய்து வருவது கட்சியினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது. அண்ணாமலை தொடர்ந்து ஊழலற்ற நேர்மையான கிளீன் பாலிடிக்ஸ் தருவதாக பேசி வரும் நிலையில் இப்படி மிகப்பெரிய ஊழலை செய்தவர் எவ்வாறு கிளீன் பாலிடிக்ஸ் செய்வார் என இணையதள வாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sve shekher again criticized TNBJP president annamalai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->