இனி இஷ்டப்பட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாது - தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனைகளின் பாதுகாப்பையும், மருத்துவர்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் கோரிக்கையை ஏற்று மருத்துவமனை பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும், நேற்று மருத்துவரை குத்தியவர் நோயாளியுடன் வந்தவர் என்பதால் இனி நோயாளிகளுடன் இருந்து கவனிப்பவர்களையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் உள் நோயாளிகளை அருகில் இருந்து கவனித்து கொள்ள வருபவர்களுக்கு கையில் ஒரு அடையாள டேக் கட்டப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த டேக்கில் கண்காணிப்பாளர் எந்த நோயாளியை பார்க்க வந்தவர்? அவர் எந்த வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் இடம்பெற்று இருக்கும். இந்த டேக் கையில் கட்டியிருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இந்த நடவடிக்கை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tagging to accompanying patients in hospitals tn govt order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->