சாலை விபத்தில் பறிபோன 5 உயிர்... நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்.! - Seithipunal
Seithipunal




தஞ்சாவூர், வலம்பக்குடி அருகே இன்று காலை சுமார் 7:00 மணி அளவில் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை ஆக சென்று கொண்டிருந்த அவர்கள் மீது எதிர்பாராத விதமாக ஈச்சர் வாகனம் ஒன்று மீதி மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்த்த முத்துசாமி, ராணி, மீனா, மோகனாம்மாள் ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இந்த விபத்தில் தனலட்சுமி என்பவர் படுகாயத்துடன் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் வலம்பக்குடி அருகே நடைபெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ள துயர செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைவேன். 

இந்த விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சங்கீதா என்பதற்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu CM announced relief


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->