இலங்கை கடற்படையினரால் கைது: சென்னை வந்தடைந்த தமிழக மீனவர்கள்.!
Tamil Nadu fishermen arrived Chennai
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் 24 பேர் பாதுகாப்பாக சென்னை வந்தடைந்துள்ளனர்.
ராமநாதபுரம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் கடந்த மார்ச் மாத சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் அவர்களது வலைகள், விசைப்படகுகள், அவர்கள் பிடித்த மீன்கள் போன்றவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையம் அழைத்துவரப்பட்டனர்.
English Summary
Tamil Nadu fishermen arrived Chennai