ஜெயலலிதா காலத்தில் சிறப்பாக இருந்தது! எடப்பாடி கே பழனிச்சாமி காலத்தில் மோசமாகிவிட்டது!
Tamil Nadu government has reduced the money ratio in a single year Proud PTR
ஒரே ஆண்டில் நிதி பற்றாக்குறை, பணம் விகிதத்தை குறைத்துள்ளது தமிழக அரசு! பெருமை கொள்ளும் பிடிஆர்!
தமிழகத்தில் உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பண வீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
அந்த சந்திப்பில் "பணவீக்கத்திற்கு உற்பத்தி அல்லது தேவை தொடர்பான பிரச்சனை இருக்கலாம். பொதுவாக பொருளாதார அடிப்படையில் அரசின் நிதி கொள்கையானது பண வீக்கத்தை பாதிக்காது. ரிசர்வ் வங்கி புதிதாக ஏதேனும் அறிவிப்பை வெளியிட்டால் உடனடியாக பாதிக்கக்கூடும்.
முதல் கொரோனா அலை காரணமாக உற்பத்தியும் தேவையும் குறைந்து இருந்தது. இதனால் மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரித்தாலும் உற்பத்தி பொருள்கள் சரியாக கிடைக்கவில்லை. இதன் காரணமாக திடீரென பணவீக்கம் அதிகரித்தது பணவீக்கம் குறைய தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைக்கும் படி மத்திய அமைச்சர் கூறினார்.
மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த ஆண்டு மொத்த கடன் பெரும் வரம்பை நிர்ணயம் செய்கிறது. இந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ83,955 கோடி தான் என்று வரையறை செய்துள்ளது. இதனால் மாநிலத்தின் உரிமை பறிக்கப்படுகிறது.
பொது வினியோகத் திட்டத்தின் செலவை தமிழக அரசு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 4000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகை பொருட்கள், பொங்கல் பரிசு பொருள், மருத்துவ செலவு என ரூ.20 ஆயிரம் கோடி திட்டமிடாத செலவு செய்ய வேண்டி இருந்தது.
கடந்த இரண்டு கொரோனா ஆண்டுகளில் தலா ரூ.13 ஆயிரம் கோடி என இருமடங்கு செலவழித்து உள்ளனர். அதே நேரம் கடன் வருவாய் பற்றாக்குறையும் கட்டுப்படுத்தியுள்ளனர்.
ஒரே ஆண்டில் பெண்களுக்கு இலவச பேருந்து உட்பட திட்டங்கள் செலவழித்தும் வருவாய், நிதி பற்றாக்குறை, பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்காமல் செய்துள்ளோம்" என மத்திய அரசு அறிக்கையில் வெளியிட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.
மேலும் பேசிய அவர் "2003 முதல் 2014 வரை குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நிதி மேலாண்மை சிறப்பாக இருந்தது 2014 முதல் 19 வரை சரிவடைந்துவிட்டது. கொரோனா காலத்தில் மிகவும் மோசமாகிவிட்டது. தற்பொழுது நிதிநிலை மாறியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் தொடர்ந்து குறைந்து கொண்டே தான் வருகிறது" என தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil Nadu government has reduced the money ratio in a single year Proud PTR