இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவசம் - தமிழக அரசின் அடுத்த அதிரடி திட்டம்! - Seithipunal
Seithipunal


ஒரு குழந்தை பிறந்தது முதல் 18 வயது வரை செலுத்தப்படக்கூடிய 16 வகையான தடுப்பூசிகளை, தமிழகத்தில் உள்ள சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், ஒரு சில தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தகவல் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் தற்போது அரசு மருத்துவமனைகளில் அனைத்து தடுப்பூசிகளும் இலவசமாக போடப்பட்ட வருகிறது.

இதே போல தமிழகத்தில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு உண்டான இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

எந்த ஒரு தனியார் மருத்துவமனையும் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுகிறோம் என்று உறுதியளித்தால் அவர்களுக்கு தடுப்பூசியை சுகாதாரத்துறை வழங்கும்.

இந்த தடுப்பூசிக்கு எவ்வித கட்டணமும் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu government private hospital vacancy free


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->