ஒரு மாவட்டம் மட்டும் மிஸ்ஸிங்.. வெளுத்து வாங்கிய கோடை மழை.. இயல்பைவிட இரு மடங்கு பதிவு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆண்டு தோறும் மார்ச் முதல் மே வரை கோடை மழையும், ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைப்பொழிவில் பெரும்பான்மையான மழையை பெறுகிறது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அதிக மழை பதிவாகும். கோடையில் எப்போதாவது நல்ல மழை இருக்கும். பெரும்பாலான காலங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இந்த ஆண்டு கோடைகாலம் ஆரம்பித்ததில் இருந்து மழை பெய்து வருகிறது.

 

கடந்த மார்ச் முதல் 2 வாரங்களில் மழை குறைந்து காணப்பட்டாலும், அதன் பிறகு இயல்பைவிட அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 2-வது வாரத்தில் மட்டும் மழையின் அளவு குறைந்து காணப்பட்டது. அதன் பிறகு ஏப்ரல் 22-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் கோடைமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மே 2-ம் தேதி பெரும்பாலான இடங்களில் மழை கொட்டி தீர்த்தது.

தொடர் கோடை மழை காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரையிலான இயல்பான மழை பொழிவை விட அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சராசரியாக கோடை மழை 7 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 15 செ.மீ. மழை பெய்து 111 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் இயல்பைவிட அதிக மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயல்பைவிட 347% அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை, சென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக கோடை வெயிலின் தாக்கமும் குறைந்து காணப்படுவதால் வழக்கமாக வாட்டி வதைக்கும் கத்தரி வெயில் காலம் தொடங்கிய நிலையிலும் கடந்த 4 நாட்களாக வெப்பத்தின் அளவு குறைந்தே பதிவாகியுள்ளது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் 100 டிகிரி பாரன்ஹிட் மேல் வெப்பநிலை பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu has recorded double the summer rainfall


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->