ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கு! ரவுடி செந்திலை தேடி மும்பை சென்ற போலீஸ்! - Seithipunal
Seithipunal


ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடி செந்திலை தேடி தமிழக காவல்துறை மும்பையில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் கடந்த மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 200 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். கொலையாளிகளின் செல்போன் அழைப்புகளை வைத்து இதுவரை 200 பேரிடம் தொடர்பு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக ரவுடி செந்திலை தேடும் பணியில் தனிபடை போலீஸ்சார் மும்பையில் முகாம் அமைத்துள்ளனர். ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களில் செந்திலை தனிப்பட்ட போலீஸ்சார் மும்பையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய செந்தில் குறித்து கூட்டாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் சிறையில் இருந்து ரவுடி ஈஷாவை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. செந்திலின் தூத்துக்குடி சென்னை நெட்வொர்க் முழு பின்னணி குறித்து ஈஷாவிடம் கேட்டறிந்துள்ளனர்.

மற்றும் செந்திலின் மற்றொரு கூட்டாளியான எலி யுவராஜை காவல்துறை காவலில் எடுத்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சேலம் சிறையில் உள்ள யுவராஜ் ஒப்பந்ததாரர் மிரட்டிய வழக்கில் காவல்துறை விசாரணை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி செந்தில் தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது மும்பையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Police special police camp in Mumbai in search of Rowdy Senthil involved in Armstrong murder case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->