டாப் கியரில் அந்த 3 தொகுதிகள்.. 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஒன்பது மணி நிலவரப்படி 12.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 8.59% வாக்குகளும்,  திருவள்ளூர் தனி தொகுதியில் 12.31% வாக்குகளும், வடசென்னை தொகுதியில் 9.73% வாக்குகளும், தூத்துக்குடியில் 11.62% வாக்குகளும், வேலூரில் 12.76% வாக்குகளும், அரக்கோணத்தில் 12.64% வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

அதேபோன்று தென் சென்னையில் 10.08% வாக்குகளும், கன்னியாகுமரியில் 11.92% வாக்குகளும், தர்மபுரியில் 15.04% வாக்குகளும், திருவண்ணாமலையில் 12.8% வாக்குகளும், ஆரணியில் 12.69% வாக்குகளும், விழுப்புரத்தில் 13.97% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

மேலும் சேலத்தில் 14.79% வாக்குகளும், நாமக்கல்லில் 14.36% வாக்குகளும், ஈரோட்டில் 13.37% வாக்குகளும், திருப்பூரில் 13.13% வாக்குகளும், நீலகிரியில் 12.18% வாக்குகளும், கோவையில் 12.16% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

அதேபோன்று சிதம்பரத்தில் 12.9% வாக்குகளும், மயிலாடுதுறையில் 12.08% வாக்குகளும், நாகையில் 12.98% வாக்குகளும், தஞ்சையில் 12.91% வாக்குகளும், சிதம்பரத்தில் 12.06% வாக்குகளும், மதுரையில் 11% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் 11.18% வாக்குகளும், காஞ்சிபுரத்தில் 12.25% வாக்குகளும், அரக்கோணத்தில் 12.64% வாக்குகளும், கிருஷ்ணகிரியில் 12.57% வாக்குகளும் பதிவாகியுள்ளது. பொள்ளாச்சியில் 13.36% வாக்குகளும், திண்டுக்கல்லில் 13.16% வாக்குகளும், கரூரில் 14.41% வாக்குகளும், திருச்சியில் 11.82% வாக்குகளும், பெரம்பலூரில் 14.35% வாக்குகளும், கடலூரில் 12.22% வாக்குகளும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே சேலம் தர்மபுரி கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் 15 சதவீத வாக்குகளை கடந்து பதிவாகியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu polling status at 9 oclock


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->