திருட்டுத்தனம்! கூடவே இருந்தது கழுத்தறுத்த அஸ்வத்தமன்! ஆம்ஸ்ட்ராங் 16வது நினைவுநாளில் பேனர்! - Seithipunal
Seithipunal


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சமீபத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தமன் ஆம்ஸ்ட்ராங்கின் 16வது நினைவுநாள் நிகழ்ச்சியில் கடந்துகொண்டதற்கான போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

சென்னையில் கடந்த ஜூலை ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக இதுவரை 21 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்ற குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தபோது போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலையை  ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சமீபத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தமன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் மகள் முதலாவது பிறந்தநாள் விழாவில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  முன்னாள் தமிழக இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தமன் கலந்துகொண்டு தமிழ்நாடு பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் புத்தகம் வழங்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

உடனிருந்து நண்பரை கொலை செய்தது மட்டுமல்லாமல் ஆம்ஸ்ட்ராங்கின் 16வது நினைவு நாள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பவரும் உடனிருந்தே நண்பனை கொலை செய்தது மட்டுமில்லாமல் நண்பனின் 16-வது நினைவு நாள் விழாவில் கலந்து கொண்டு உள்ளார் என்றால் எவ்வளவு திருட்டுத்தனம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Youth Congress General Secretary Ashwathaman was recently arrested in the Armstrong murder case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->