பாஜக சொல்லி அல்ல! செய்தியை பார்த்தாலே மக்கள் அச்சம் கொள்வார்கள்!
Tamilisai Soundarrajan explains about the BJP bandh
கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசியதாவது "கோவை கார் வெடி விபத்து போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். இந்த சம்பவம் நடக்கும் வரையில் ஏன் தெரியாமல் போனது என்பது குறித்து காவல்துறையினர் ஆராய வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லாமல் மாநில முழுவதும் பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும்.
குண்டு வெடித்தது என பாஜக சொல்லித்தான் மக்கள் பீதி அடைய வேண்டுமா என்ன? காரில் குண்டு வெடித்தால் அந்த செய்தியை பார்த்து மக்கள் அச்சம் கொள்வார்கள். பாஜக கருத்து சொல்வதனால் மக்கள் அச்சம் அடைவார்கள் என்று அல்ல. மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்பது எனது கருத்து. இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்கவே அமைதியான முறையில் பந்த் நடத்தப்படுகிறது. அமைதியான முறையில் கடைகள் அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம் என்ன செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்தார்.
English Summary
Tamilisai Soundarrajan explains about the BJP bandh