அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த தமிழிசை! கொந்தளிப்புடன் பேட்டி! - Seithipunal
Seithipunal


பாஜக ஐடி விங், அண்ணாமலை வார் ரூம் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தமிழிசை சவுந்தராஜன் பேட்டியளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தராஜன் தெரிவிக்கையில், "தென் சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்யவில்லை என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

தென் சென்னையில் அரசியல் சார்பற்று சேவை செய்ய வேண்டும் என்ற இளைஞர்கள் என்னோடு இணையலாம். தென் சென்னையில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டாலும், செய்யப்படவில்லை என்றாலும் நாங்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்.

பலஜகவின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், திமுகவிற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்பது உண்மை. பாஜக - அதிமுக கூட்டணி நீடித்திருந்தால் நிச்சயம் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். 2026 கூட்டணி பற்றி பேச தற்போது முடியாது. எவ்வளவு கிண்டல் செய்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரத்தான் செய்யும்" என்று தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.

மேலும், ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை? எனவும் ஆவேசமாக தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai warn to Tn BJP IT Wing and BJP war room


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->