பரபரப்புக்கு மத்தியில் டெல்லி விரைகிறார் அண்ணாமலை - நடந்தது என்ன?
tamilnadu bjp leader annamalai going to delhi for tn fishermans arrest issue
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது நடவடிக்கை மட்டுமல்லாது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலும் நடத்தி வருகின்றனர். அதிலும் கடந்த வாரத்தில் மட்டும், இலங்கை கடற்படையின் கப்பல் மோதி மலைச்சாமி என்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, நேற்றைய தினம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தமிழக மீனவரின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மனு அளிக்க உள்ளார்.
இதற்காக தமிழக மீனவர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்லவுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நாகை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதி மீனவர்களும் செல்கின்றனர்.
English Summary
tamilnadu bjp leader annamalai going to delhi for tn fishermans arrest issue