தமிழகத்தில் மாணவர்களிடையே "கூல் லிப்" போதைப்பொருள் புழக்கம் - சென்னை உயர்நீதிமன்றத் போட்ட அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


பள்ளி, கல்லூரி மாணவர்கள் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகி உள்ளதாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பரத சக்ரவர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்தாவது, ‘கூல் லிப்’ போன்ற இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கூல் லிப்புக்கு தடை விதிக்கப்பட்டாலும், பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் இதுபோன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் மோதல் ஏற்படுகிறது.

இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? - ஒன்றிய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக கடந்த மாதம் 29 ஆம் தேதி பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இந்த கூல் லிப் போதைப்பொருள் குறித்து தெரிவிக்கையில், "தமிழகத்தில் மெல்லக்கூடிய புகையிலை தடை செய்யப்பட்டு உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தற்போது தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கூல் லிப் என்கின்ற புகையிலை விற்பனைக்கு வந்த போதே தமிழக அரசை நான் எச்சரித்திருந்தேன். 

ஆனால் இன்று பள்ளி மாணவர்கள் இந்த கூல் லிப் என்கின்ற புகையிலை பொருளை சகஜமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CoolLip Drugs HighCourt Order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->