#BREAKING | தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அதிகாரபூர்வ செய்தி!
Tamilnadu corona lockdown 2023 fake news
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது, நாடு முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த சில வாரங்களில் மட்டும் நோய் தொற்றுக்கு பாதிப்பு உள்ளாகியுள்ளனர்.
இதேபோல் தமிழகத்திலும் கடந்த ஆறு, ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், "தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் முக கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம் என்று அறிவித்தார்.
மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், நோயாளி உடன் வருபவர்கள், உள் நோயாளிகள் அனைவரும் முழுக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதாக பரபரப்பான தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்தி தான் என்று, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாசு சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலில் எந்த உண்மையையும் இல்லை என்றும் தற்போது அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இரவு நேரத்தில் ஊரடங்கு என்று தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியை, தற்போது சில சமூக விரோதிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தமிழக மக்களிடையே பீதியை கிளப்பி வருகின்றனர்.
English Summary
Tamilnadu corona lockdown 2023 fake news