முதல்முறையாக தமிழகத்தை சேர்ந்த 3 பெண் அர்ச்சகர்கள்! ஸ்ரீரங்கம் கோவிலில் பயிற்சி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், சென்னை போன்ற இடங்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியில் சேர்பவர்களுக்கு ஒரு ஆண்டு காலம் ஆகமம், பூஜை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 94 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். 

அவர்களில் 3 பேர் பெண்கள் ஆவார். முதுகலை பட்டதாரியான ரம்யா, இளங்கலை கணிதவியல் பட்டதாரியான கிருஷ்ணவேணி, இளங்கலை பட்டதாரியான ரஞ்சிதா ஆகிய 3 பேரும் ஒரு வருடம் பயிற்சி காலம் முடித்துள்ளனர். 

3 பெண்கள் உள்பட 94 பேருக்கும் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு சான்றிதழ் வழங்கினார். இந்த திட்டத்தில் ஆர்வப்படும் பெண்களும் ஆண்-பெண் பேதம் இல்லாமல் சேர்த்துக் கொள்ளப்படுவதாக அறநிலைத்துறை தெரிவிக்கிறது. 

தற்போது மூன்று பெண்களும் 6 மாத பயிற்சி வகுப்பு முடிந்ததும் பஞ்ராத்ர ஆகமத்தின் மன்னார்குடி ஜீயரிடம் தீட்சை பெற்றுள்ளார்கள். 

இந்த 3 பெண்களும் ஸ்ரீரங்கம் கோவிலில் உதவி அற்பசகர்களாக பயிற்சி பெறுவார்கள். அதன் பிறகு தேவைப்படும் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu first time 3 women priests


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->