தமிழக மீனவர்கள் கைது - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்து இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில், ஏற்கனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் உள்ள நிலையில், இன்று மேலும் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களது விசைப்படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

அதே சமயம் முதலமைச்சர், சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu fisherman aressted stalin letter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->