டிஎன்பிஎஸ்சி வனத்தொழில் பழகுநர் தேர்வு தேதி மற்றும் நேரம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு வனத்துறையை சேர்ந்த வன தொழில் பழகுநர் பணிக்கான தேர்வு வருகிற டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வனத்தொழில் பழகுனருக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியான நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. 

அதற்கான, தேர்வு மையங்களாக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தேர்வு மையங்களில் வனத்தொழில் பழகுநர் தேர்வு நடைபெறும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மேலும், கட்டாய தமிழ் மொழி தேர்வு‌ டிசம்பர் 4-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நேரடியாக எழுத்து முறையில் நடைபெறும். அதன் பிறகு பிற பாடங்கள் கணினி வழி தேர்வாக டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை காலை மற்றும் மதியம் வேலைகளில் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu forest department employement exam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->