முக்கிய அறிவிப்பு || தவறான தகவலை பரப்ப வேண்டாம்.!! - தமிழ்நாடு வனத்துறை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் யானையில் வாழித்தடம் குறித்து ஒருங்கிணைப்பு திட்ட வரைவு குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "யானைகள் வழித்தட ஒருங்கிணைப்பு திட்டத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டு வனத்துறையின் இணையதளத்தில் பொது மக்களின் தகவலுக்கும் யானை ஆய்வாளர்களின் ஆலோசனைகள் பெறுவதற்கும் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

அந்த வரைவின் மீது பெறப்பட்ட கருத்துக்கள் தற்போது மாவட்டம் வாரியாக தொகுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் தொகுக்கப்பட்ட பின்னர் யானை இருப்பிட பகுதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்துக்கு ஏறப கூட்டம் நடத்தப்பட்டு கருத்துக்கள் ஆலோசனைகள் பதிவு செய்யப்படும். 

அக்கூட்டத்தில் யானைகளின் துண்டு பட்ட வழித்தடங்களை இணைப்பதற்கான வழிமுறைகள் பொதுமக்களின் ஒத்துழைப்போடு தொகுக்கப்படும். அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு வழித்தடத்திற்கும் துவக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் இறுதி யானை வழித்தட ஒருங்கிணைப்பு திட்டம் தயாரிக்கப்படும். 

பின்னர் அவ்வாறு துவங்கப்பட்ட இறுதி ஆவணம் மாநில அரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும். இறுதி ஆவணத்தில் மனித மற்றும் வன உயிரின மோதல்களை தவிர்க்கவும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்படும். அந்த இறுதி ஆவணமே மாநில அரசால் பரிசீலனை செய்யப்பட்டு அறிவிக்கப்படும். எனவே யானைகள் வழித்தட ஒருங்கிணைப்பு திட்ட வரைவு குறித்து தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம்" என வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu forest department explanation about elephant route


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->