பொங்கல் பண்டிகை - போக்குவரத்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போக்குவரத்து துறையினர் ஊழியர்களுடன் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வருகிற 9-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். 

அதன்படி பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் நடந்த இந்த போராட்டம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்துக்கு ஊழியர்களுக்கான 2023- ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகைக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 

அந்த அரசாணையில், "ஊழியர்கள் ஆண்டின் கடைசி நாளில் வேலைக்கு வந்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது. இதில், "200 நாட்கள் மற்றும் அதற்கும் மேலாக பணிபுரிந்தவர்களுக்கு ரூ.625 ரூபாயும், 151 நாட்கள் முதல் 199 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195-ம், 91 நாட்கள் முதல் 151 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85-ம் ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu govt announce incentives to transport employees for pongal festival


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->