ஜூன் 24ம் தேதி தொடங்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையின் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற ஜூன் 24ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சுமார் 50 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் முவைக்கபடவுள்ளதால், கூட்டத்தொடர் ஒன்றரை மாதங்கள் நீடிக்கும் எனத் எதிர் பார்க்க படுகிறது. கூட்டத்தொடர் அமர்வின் சரியான கால அளவு ஜூன் 24 க்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நடைபெறும் சபையின் வணிக ஆலோசனைக் குழுக் கூட்டத்தால் தீர்மானிக்கப்படும் என்று கூற படுகிறது.

"பட்ஜெட் தாக்கல் மற்றும் அதன் மீதான விவாதம் பிப்ரவரியில் முடிந்துவிட்டதாக தெரிவித்தார். லோக்சபா தேர்தல் காரணமாக சட்டசபை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது" என்று செய்தியாளர் சந்திப்பில் சபாநாயகர் எம்.அப்பாவு கூறினார்.

அமர்வின் சில பகுதிகள் ஏற்கனவே நடந்து வருவதாகவும், உரிய நேரத்தில், முழு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும் என்று தமிழக சட்டசபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்புவது குறித்து  சபாநாயகர் எம்.அப்பாவு கூறினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆளும் திமுக கூட்டணி மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதையடுத்து, வருகின்ற கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. அ.தி.மு.க. சட்டம்-ஒழுங்கு பிரச்னையை குறை கூறி வரும் நிலையில், தமிழக அரசு இந்த கூட்ட தொடரில் புதிய அறிவிப்புகள் மற்றும் நலத்திட்டங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 50 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், கூட்டத்தொடர் ஒன்றரை மாதங்கள் நீடிக்கும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடர் அமர்வின் சரியான கால அளவு ஜூன் 24 க்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நடைபெறும் சபையின் வணிக ஆலோசனைக் குழுக் கூட்டத்தால் தீர்மானிக்கப்படும் என்று சபாநாயகர் எம்.அப்பாவு கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu gpovernment upcoming budget session


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->