தமிழ்நாட்டில் 72% or 69%? ECI ஏற்படுத்திய குழப்பம்! வெளியான முக்கிய தகவல்.!!
TamilNadu loksabha polling official details released on 11oclock
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் காண வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணி வரை நடைபெற்றது. மாலை 6:00 மணி வரை வரிசையில் நின்ற அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்கிடையே நேற்று இரவு 7 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 72% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது. அதிகாரப்பூர் தகவல் பின்னர் வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் 69.4 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி 72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக வெளியிடப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட 3 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் முழு விவரம் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முரண்பட்ட வாக்கு சதவீதத்தால் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
English Summary
TamilNadu loksabha polling official details released on 11oclock