மின்கட்டணத்தை தொடர்ந்து பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா..? பதிலளித்த அமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


ஈரோடு பேருந்து நிலையத்தில் 15 புதிய பேருந்துகள் தொடக்க விழா நடைபெற்றது . இந்த தொடக்க விழாவில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் பங்கேற்றனர். 

புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் மொத்தமாக 7,200 பேருந்துகள் புதிதாக கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வாரத்துடன் 1300 பேருந்துகள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. 

மீதமுள்ள பேருந்துகள் தயாரிப்பு நிறுவனம் வழங்கியவுடன் இயக்கப்படும். தவிர்க்க முடியாத காரணங்களால் மின்கட்டணம் உயர்ந்த பட்ட நிலையில் அதேபோல் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

இது அவர்களது விருப்பமாக இருந்தாலும் அதற்கு பதில் தெரிவிக்க நாங்கள் தயாராக இல்லை. தனியார் பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாகவும் அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார் புகார்கள் வருகின்றன. இதே போன்ற புகார்கள் வந்தால் குழு அமைப்பு விசாரணை நடத்தப்படும். 

கியாஸ் மூலமாக இயக்கப்படும் 8 பேருந்துகள் பரீட்சார்த்த முறையில் இயக்கப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் 500 பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது முதலில் 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. மினி பேருந்துகள் கூடுதலாக இயக்குவது குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வருகின்ற 22ஆம் தேதி மக்களின் கருத்தை உள்துறைச் செயலாளர் பெறுகிறார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஒப்புதலுக்கு பின்னர் மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க ஆட்சியில் புதிய ஓட்டுநர், நடத்தினார்கள் நியமிக்க நியமனம் செய்யப்படாததால் 2000 வழிதடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது புதிய நியமனங்கள் மூலம் 800 வழிதடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu minister Sivashankar speech


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->