வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை.. வானிலை ஆய்வு மையம்.!
TamilNadu next 3 hours rain in 4 districts
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிற இன்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
அதன் பிறகு மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8ம் தேதி காலை வட தமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் வந்தடைய கூடும். இன்றும், நாளையும் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
English Summary
TamilNadu next 3 hours rain in 4 districts