6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது.? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து அரையாண்டு தேர்வு டிசம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

மேலும் 6 முதல் 9ம் வகுப்புக்கான பருவத்தேர்வுகள் மற்றும் 10,11,12 ஆம் வகுப்புக்கான அலகு மற்றும் திருப்புதல் தேர்வு ஆகியவை தொடர்பான முழு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. எனவே இந்த தேர்வு அட்டவணைக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார் செய்ய வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu school quarterly and halfyearly exam time table


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->