100 நாள் வேலைத் திட்டம் - தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கடந்த 2005-ம் ஆண்டு மத்திய அரசால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் நாடு முழுவதும் 13.13 கோடி பயனாளிகள் உள்ளனர். இந்த திட்டம் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 

இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பங்கேற்பை எளிதாக்க குழந்தைகள் காப்பகத்திற்கான ஏற்பாடு, இருப்பிடம் அருகிலேயே பணி என்பது உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தரவு தளம், கடந்த நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு தொடர்பாக மாநிலங்கள் வாரியான விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், 89.27 சதவீதம் பெற்று கேரளா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

இதையடுத்து புதுச்சேரி மாநிலம் 87.39 சதவீதம் பெற்று 2-ம் இடத்திலும், தமிழகம் 86.66 சதவீதம் பெற்று 3-ம் இடத்திலும் உள்ளது. கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கோவா உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் மட்டுமே 70 சதவீதத்துக்கு அதிகமான பெண்களின் பங்கேற்பினை தந்திருக்கின்றன. 50 முதல் 70 சதவீத பங்களிப்பினை 16 மாநிலங்களும், 50 சதவீதத்துக்கு குறைவான பங்களிப்பினை 14 மாநிலங்களும் வழங்கியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu third place of 100 days work


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->