தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!
tamilnadu weather 11072023
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிகளில் கூடிய லேசானது முதல் மிதமாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது.
நாளை முதல் 17.7.2023 வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் ஓரிரு இடங்களில் இடி மின்னணுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னையில் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் 11 சென்டிமீட்டர் மழையும் குறைந்தபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிகளில் ஒரு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்கள் எச்சரிக்கை!
English Summary
tamilnadu weather 11072023