தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal



தென் இலங்கைக்கு கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (17.12.2023) தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை (18 .12 .2023) தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்க வாய்ப்புள்ளதாகவும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இலங்கை அகதிகள் முகாமை சூழ்ந்த மழை வெள்ளம், வீடுகளுக்குள் புகுந்ததால் இலங்கை தமிழர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கனமழை பெய்யும் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு, மீட்பு பணியில் ஈடுபட 100 பேர் அடங்கிய 4 தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால், திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tAMILNADU wEATHER aLERT 17122023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->