மக்களே உஷார்... தமிழகத்தில் ''கன முதல் மிக கனமழை''... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!  - Seithipunal
Seithipunal



மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

மேலும் வலுவான தரைக்காற்றில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி , திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதிகள் மற்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25-26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளில் 13 சென்டிமீட்டர் மழையும் திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் ஒரு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu weather report 15072024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->