அமெரிக்காவில் தவித்த தமிழக குழந்தையை மீட்ட தமிழக அரசு!
TamilNadu Child rescue in America
அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 17 மாத குழந்தை ஒன்று, முறைகேடாக பஞ்சாப் தம்பதியினருக்கு தத்து கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு பின்பு, தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில், அயலக தமிழர் நல வாரியத்தின் நடவடிக்கையால், குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் பிரவீன் குமார் - தமிழ்செல்வி தம்பதி. இவர்கள் அமெரிக்காவின் மிஸ்ஸசிபி மாநிலத்தில் வசித்து வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு, மே மாதம் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களுக்கு பிறந்த விஷ்ரூத் என்ற குழந்தையை, அந்நாட்டு குழந்தை பாதுகாப்பு சேவைகள் அமைப்பு தங்களுடைய பாதுகாப்பில் எடுத்து கவனித்து வந்தது.

பின்னர் பவர் ஆஃப் அட்டர்னியை முறை கெடாக பயன்படுத்தி அக்குழந்தையை தத்து கொடுத்துள்ளனர். இதனை அறிந்த குழந்தையின் பாட்டி சாவித்திரி, சித்தி அபிநயா அமெரிக்கா சென்று குழந்தையை மீட்க நீதிமன்ற உதவியை நாடினர்.
மேலும் அவர்களுக்கு இந்திய தூதரகம் மற்றும் தமிழக அரசின் அயலக செயலக தமிழர் நலவாரியம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தது.
இந்த நிலையில், குழந்தையின் பாதுகாப்புக்கு தமிழக அரசு உத்தரவாதம் அளிக்கும் என்று கடிதம் கொடுக்கப்பட்டது. மேலும் சித்தி மற்றும் பாட்டியுடன் இருக்கும் போது தான் குழந்தை
மகிழ்ச்சியாக இருப்பதை அறிக்கையின் மூலம் அறிந்த நீதிமன்றம், குழந்தையை பாட்டி மற்றும் சித்தியுடன் ஒப்படைக்க உத்தரவிட்டது.
சுமார் இரண்டு ஆண்டுகள் நடந்த நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு அமெரிக்க குடியுரிமை பெற்ற மூன்று வயது குழந்தை நேற்று இரவு சென்னை கொண்டுவரப்பட்டது.
English Summary
TamilNadu Child rescue in America