தமிழக மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு - இனி வீடுகளில் RCD கட்டாயம்..!
TANGEDCO Announced RCD Installation is Important at Everyones Home
தமிழக மின்சார வாரியம் மாநிலத்தில் உள்ள அனைத்து பயனர்களுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி உங்கள் வீட்டில் RCD பொருத்திய புகைப்படங்களை எடுத்து டிவிட்டர் பக்கத்தில் #TANGEDCO_RCD_Safety என்ற ஹேஷ்டேக்குடன் பதிவேற்ற வலியுறுத்தியுள்ளது.
TANGEDCO மின் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக வீடுகளில் RCD என்ற சிறிய பாதுகாப்புக் கருவியை பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ளது. வீடுகளில் உள்ள மின்னோட்டத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் இந்த RCD கருவியானது தானாகவே மின்சாரத்தை துண்டிக்கும் திறன் பெற்றது.
நமது வீட்டில் உள்ள பியூஸை விட அதிவேக திறன் கொண்ட இந்த RCD கருவி ஷாக் அடிப்பதில் இருந்து பாதுகாப்பு தருவதோடு, உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. மின் அதிர்ச்சி மூலம் ஏற்படும் கடுமையான காயங்களையும் தவிர்க்க உதவுகிறது.
தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் மின்சாரம் செல்லும் வயரைத் தொட்டால், உங்கள் மூலமாக திட்டமிடப்படாத பாதையில் பாயும் மின்சாரத்தைக் கண்டறிந்து, தானாகவே இந்த RCD கருவியானது மின் சுற்றை அணைத்து விடக்கூடிய திறன் பெற்றதாக உள்ளது.
மேலும் மழைக் காலங்களில் ஏற்படும் எதிர்பாராத மின் கசிவு, ஈரமான நிலையில் மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது ஏற்படும் மின் அதிர்ச்சி ஆகியவற்றால் ஏற்படும் எதிர்பாராத உயிரிழப்புகளைத் தடுக்க இந்த RCD கருவிகளை ஒவ்வொருவர் வீட்டிலும் பொருத்துவது கட்டாயம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) அறிவித்துள்ளது.
மேலும் உங்கள் வீட்டில் RCD கருவி பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
English Summary
TANGEDCO Announced RCD Installation is Important at Everyones Home