பேருந்தால் பேருந்தை இடித்து நொறுக்கி பழி வாங்கிய டிரைவர்.! தஞ்சையில் அதிர்ச்சி.!
tanjore private bus fight video viral
பொதுவாக தனியார் பேருந்துகள் என்றாலே பலருக்கும் பல்வேறு விஷயங்கள் ஞாபகத்திற்கு வரும். கிராமத்து தனியார் மற்றும் இனி பேருந்துகளில் பொது இடத்தில் எப்படிப்பட்ட பாடல்களை போட வேண்டும் என்ற மரியாதை கூட தெரியாமல் பல ஓட்டுநர்கள் செயல்படுவார்கள்.
இந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள் ஒரு ராஜா போலவே செயல்படுவார்கள். இவர்களது அட்டூழியத்திற்கு முடிவு இல்லையா என்று அடிக்கடி பொதுமக்கள் ஆதங்கப்படுவது வழக்கம். இது மட்டும்தான் என்றில்லை. அதிவேகமாக சென்று பயணிகளை அச்சுறுத்துவது.
பஸ்ஸை வளைத்து, நெளித்து ஒட்டி சாகசம் புரிவது, பெண்கள் முன் ஸ்டைலாக வாகனம் ஓட்டி ஸீன் போடுவது என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். மேலும், இந்த தனியார் பேருந்துகளுக்கு இடையே கூட சர்ச்சைகள் ஏற்படும். பயணிகளை ஏற்றிக்கொண்டு யார் முன்னே செல்வது? யார் பின்னே செல்வது? என்ற பிரச்சனை இருக்கும்.
அந்த வகையில் தஞ்சாவூரில் இன்று நடந்த சம்பவம் வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு பேருந்து ஓட்டுநருடன் மற்றொரு பேருந்து ஓட்டுநருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
யார் முன்னால் செல்வது என்ற பிரச்சனை எழுந்த நிலையில் தனது பேருந்துக்கு பின்னால் நின்ற தனியார் பேருந்தை ஒரு ஓட்டுனர் பேருந்து கொண்டு தாக்கி நொறுக்கியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
English Summary
tanjore private bus fight video viral